Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

Advertiesment
karur
, ஞாயிறு, 8 ஜனவரி 2023 (18:05 IST)
கரூரில் சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 
அகில இந்திய சிலம்பம் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
 
இதில், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கரூர் தாந்தோணி ஒன்றியம், கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளி 4ம் வகுப்பு மாணவி பூமிதா பங்கேற்று 2 தங்கப் பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றார். சாதனை படைத்த மாணவி பூமிதாவாவை பாராட்டி தாண்டோணி வட்டார கல்வி அலுவலர் கவுரி நேற்று பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டது: கோர்ட்டில் கூறிய போலீசார்!