Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில் காவல்துறையினரின் தடியடிக்கு தமிழ்நாடு வீ. க. ப.க கண்டனம்

karur
, புதன், 4 ஜனவரி 2023 (21:39 IST)
கரூரில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 264 வது பிறந்த நாள் விழாவில் காவல்துறையினரின் தடியடிக்கு தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் கண்டனம்.
 
கரூர் மாவட்ட தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் சார்பில் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில் கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு தேவராட்டமும், பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு இருசக்கர வாகன ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது என்றும் அவர்கள் மீது போலீஸார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியது. மேலும் நிர்வாகிகளின் சட்டையை பிடித்தும், தள்ளுமுள்ளு நிகழ்ச்சியும் அரங்கேறியது. ஒரு சிலரது சட்டைகளையும் போலீஸார் கிழித்தது. சுதந்திர போராட்ட வீரருக்கு அதுவும் அவரது பிறந்த நாளில் போலீஸ் லத்தி சார்ஜ் நிகழ்த்தியது தமிழக அளவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்விற்கு ஏற்கனவே, மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், கரூர் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுகழகத்தின் மாநில பொதுச்செயலாளர் க.இராமகிருஷ்ணன், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் மிதுன்குமார் என்பவர் தான், இந்த தடியடிக்கு காரணம் என்றும், வேண்டுமென்றே இந்த தடியடியை மறைக்கும் பொருட்டு காவல்துறையினர் வீண் பழி போட்டு வழக்கு பதிய முகாந்திரம் ஏற்பாடு செய்வதாகவும், கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விரைவில் அவரை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் க.இராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
 
பேட்டி : க.இராமகிருஷ்ணன் – மாநில பொதுசெயலாளர்  தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசிய டென்னிஸ் போட்டியில் 4 பதக்கங்கள்..... யாழினி ரவீந்திரன் அபார சாதனை