Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை !

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:52 IST)
வருகின்ற 20 தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

 
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு தமிழக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. 
 
கடந்த நவம்பர் 16 வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் முகாமில் பெயர் சேர்ப்பு, நீக்குதல், முகவரி மாற்றம் என 30 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்தும் நிலை குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
 
 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் வாக்கு இயந்திரம் மற்றும் விவிபெட்  வைக்கும் கிடங்கும் தற்போது 7 மாவட்டங்களில் தயார் நிலையில் இருப்பதாகவும். மற்ற 31மாவட்டங்களில் புதிய கிடங்குகளுக்காக பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது அந்த பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
 
மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் பதட்டமான வாக்குசாவடி அதிரிக்ககூடும் என தகவல் வெளியான நிலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

5,8 வகுப்புகளுக்கு ஆல் பாஸ் திட்டம் ரத்து ஏன்? அண்ணாமலை விளக்கம்

தேசிய மனித உரிமை தலைவராக தமிழர் நியமனம்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments