தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்… ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி – உதயநிதி பேச்சு!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (16:41 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என பேசியுள்ளார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது மத்திய மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இன்று கூட்டம் ஒன்றில் பேசிய அவர் ‘நான் இளைஞரணியில் பொறுப்பேற்ற போது 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என தலைவர் கூறினார். பதவியேற்ற பின்னர் சும்மா இருக்க கூடாது. கடினமாக உழைக்க வேண்டும். தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் வரப்போவது உறுதி. திமுகவில் பல அணிகள் இருந்தாலும் இளைஞரணியின் பங்கு முக்கியமானது. இந்தியாவின் மிகப்பெரிய மூன்றாவது கட்சியாக திமுகவை மாற்றியதற்கு நீங்கள்தான் காரணம். அதேபோல், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற உறுதி ஏற்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

cyclone ditwah: டிட்வா புயல் தாக்கம்!.. சென்னையில் கனமழை!.. 47 விமானங்கள் ரத்து!..

இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்!.. பலி எண்ணிக்கை 132ஆக உயர்வு!....

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments