Publish Date: Fri, 08 Jan 2021 (15:22 IST)
Updated Date: Fri, 08 Jan 2021 (15:24 IST)
தமிழகத்தில் அரசு சார்பில் வழக்கப்படும் பொங்கல் பரிசில் தலைவர்கள் படம் இடம்பெறுவது குறித்த சர்ச்சையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு பொங்கல் பையும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பை வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பையில் முதல்வர் படம் இடம்பெற்றுள்ளது மற்றும் பொங்கல் பை வழங்கும் இடங்களில் பேனர் வைக்கப்பட்டுள்ளது குறித்தி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் “அரசு வழங்கும் பொங்கல் பைகளில் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் படங்கள் இடம்பெறுவதில் பிரச்சினையில்லை. ஆனால் பொங்கல் பை வழங்கும் இடங்களில் அமைக்கப்படும் பேனர்கள் அகற்றப்பட வேண்டும்” என உத்தரவிட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.