Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவின் ’’ஈஸ்வரன்’’ பட நேரம் இவ்வளவு தானா?? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சிம்புவின் ’’ஈஸ்வரன்’’ பட நேரம் இவ்வளவு தானா?? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (15:53 IST)
நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகையொட்டி வெளியிடத் தயாரானதால் பொங்கலுக்கு ரிலிஸாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரன் படம் பற்றிய முக்கிய தகவல்  தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிம்பு, நிதி அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் தமன் இசையில் உருவான திரைப்படம் ஈஸ்வரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று சென்சார் ஆனதாகவும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரி 14ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகும் என்றும் ஜனவரி இரண்டாம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் அறிவித்தார். அவர் கூறியபடி பாடல்கள் வெளியான நிலையில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசு விஜய்யின் கோரிக்கை ஏற்று தியேட்டர்களில் 100% அனுமதியளித்தது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளை எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வரிசைப்படிதான் வழக்கை விசாரிக்க முடியும் என நீதிமன்றம் கூறிவிட்டது.

மேலும், தியேட்டர் அதிபர்கள், பொங்கலுக்கு 50% அனுமதி கிடைத்தால் அதில் மாஸ்டர் படத்தை மட்டுமே திரையிடுவதாக அறிவித்தனர். இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று 50% இருக்கைகளுடன் வரும் ஜனவரி 11 ஆம் தேதி வரை இயங்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்து மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் ரிலீஸின் போது எப்படி திரையங்குகள் இருக்கும் என கேள்வி ஏழுந்துள்ளது.பொ

இந்நிலையில், சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் மொத்தமும் 2 மணிநேரம் 5 நிமிடம் மட்டுமே ஓடும் என தகவல் வெளியாகிறது. இப்படத்திற்கு வழங்கபட்டுள்ள சென்சார் சான்றிதழில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுசீந்தரனின் பட பாணி பாண்டியநாடு படம் போன்று இப்படமும் விறுவிறுப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. 

நேற்று ஈஸ்வரன் படக்குழுவினர், எத்தனை சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதியளித்தாலும் ஈஸ்வரன் பொங்கலுக்கு ரிலீஸாகும். மேலும் ங்கலுக்கு ரிலிஸ் செய்யவேண்டுமென்பதற்காகவே ஈஸ்வரன் எடுக்கப்பட்டுள்ளது எனவே நிச்சயம் இப்படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்னும் சில மணிநேரத்தில் இப்படத்தில் டிரெயிலர் ரிலீஸாகவுள்ளதால் ரசிகர்கள் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்