Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்

பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி – ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட்
, வெள்ளி, 8 ஜனவரி 2021 (15:39 IST)
இந்தியாவின் பொக்கிஷமாகப் பார்க்கப்படுபவரும், ஆஸ்கார் நாயகருமான ஏ.ஆர்.ரஹ்மான் நாளை (06-1-21) ஆம் தேதி தனது 54 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். எனவே அவரை சினிமா மற்றும் அனைத்துத்துறையில் உள்ளவர்களும், ரசிகர்களும் வாழ்த்தினர். இந்நிலையில் இதற்கு ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஒரு பதிவிட்டுள்ளார்.,
 


மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா நடிப்பில் வெளியான படம் ரோஜா. இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் திலீப்குமார் என்ற ஏ.ஆர்.ரஹ்மான்.
இப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு ரஹ்மானின் பாடல்களும் இசையும் ஒருகாரணம்.

இதனையடுத்து, தனது ஒரே படத்திலேயே இளையராஜாவுக்கு போட்டியாக ரஹ்மான் உருவானார். இத்தனைக்கும் இளையராஜாவிடன் கீ போர்ட் பிளேயராக தனது இளம் வயதில் தந்தையின் மரணத்திற்குப் பின் இசைத்தொழிலைத் தொடங்கியவர் ரஹ்மான்.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராகப் புகழ்பெற்ற ரஹ்மான 2009 ஆம் ஆண்டு சிறந்த பாடம் மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்து இன்றும் பலருக்கும் முன்னோடியாக உள்ளார்.

சமீபத்தில்ட் .A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு சினிமா துறையிலுள்ள இயக்குநர்கள், நடிகர்கள்,பாடலாசிரியர்கள்,கலைஞர்கள் என பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து அவரது அம்மாவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்,.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், எனது கஷ்டமான நேரத்தில் எனக்காகப் பிரார்த்தனை மற்றும் இரங்கல் தெரிவித்து மெசேஞ் செய்த அனைவருக்கும் நன்றி; உங்களுடைய கருணையை நான் என்றைக்கும்  நினைவில் கொள்வேன். எல்லாம் வல்ல ஆசீர்வாதம் இப்புத்தாண்டில் உங்களுடன் இருக்கும். எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் கொஞ்சம் நகருங்க.. முன்னால் வந்த ராக்கி பாய்! – சாதனை படைத்த கேஜிஎஃப்2 டீசர்!