Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயிற்றை ஸ்கேன் செய்துப் பார்த்து அதிர்ச்சியானப் பெண்– இப்படி எல்லாம் கூட நடக்குமா ?

வயிற்றை ஸ்கேன் செய்துப் பார்த்து அதிர்ச்சியானப் பெண்– இப்படி எல்லாம் கூட நடக்குமா ?
, புதன், 12 ஜூன் 2019 (08:50 IST)
கோவையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் உடலினுள்ளாகவே பஞ்சை வைத்து தைத்துள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் புவனேஸ்வரி.  இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவையில் பிரபலமாக உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்கம் மற்றும் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த பல்வேறு சிகிச்சைகளையும் எடுத்துள்ளார். ஆனாலும் வலி குறையாததால் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அதிர்ச்சியளிக்கும் விதமாக வயிற்றில் காட்டன் போன்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து புவனேஸ்வரி தனது கணவரோடு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்புக் கூட்டத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை மனுக் கொடுத்துள்ளார். சினிமா பாணியில் இப்படிக் கவனக்குறைவாக நடந்த சம்பவத்துக்காக சம்மந்தப்பட்ட மருத்துவமனை மீது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சியையும், கட்சியையும் கைக்குள் வைக்க ஈபிஎஸ் ப்ளான்: ஏமாறாப்போகும் ஓபிஎஸ்?