Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஏன் நடக்கிறது ? - லதா ரஜினிகாந்த் கேள்வி

Advertiesment
crimes against children .Lata Rajinikanth
, செவ்வாய், 11 ஜூன் 2019 (21:06 IST)
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் குழந்தைகள் நல பாதுகாப்பிற்காக தயா பவுண்டேசன் என்ற அமைப்பை நடத்திவருகிறார். இந்த அமைப்பு சார்பில் இன்று கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் கலந்து கலந்து கொண்ட லதா ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
 
அவர் கூறியதாவது :
 
குழந்தைகளுக்கான அமைதி என்ற அமைப்பை குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகவே ஏற்படுத்தியுள்ளோம்.தற்போது இதனை ஒவ்வொரு ஊருக்கும் கொண்டு சென்றுகொண்டிருக்கிறோம்.
 
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் இந்த அமைப்பை தொடங்க இருக்க்கிறோம். அதற்காக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம்தான் இன்று நடைபெற்றது.
 
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது. அதனா குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு வர வேண்டும்,குழந்தைகளைப் பாதுகாப்பது நமது சமூகக் கடமை.குழந்தகளுல்லு நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. சமுதாயம் ஒன்றாக இணைந்தால் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
 
நிறைய சைல்ட் லைன் இருந்தாலும் தவறுகள் நடந்துவருகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். குழந்தைகளுகு எதிரான குற்றங்கள் நடக்கும் போது உடனடியாக கூறினால் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், தவறுகள் குறையும் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜராஜ சோழன் சர்ச்சை: இயக்குனர் ரஞ்சித் மீது மேலும் ஒரு வழக்கு!