Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'வாட்ஸ் ஆப்' பார்த்து பெண்ணுக்குப் பிரசவம் ? பகீர் சம்பவம்

Advertiesment
'வாட்ஸ் ஆப்' பார்த்து பெண்ணுக்குப் பிரசவம் ?  பகீர் சம்பவம்
, வியாழன், 6 ஜூன் 2019 (16:56 IST)
கோவை மாவட்டத்தில் மருத்துவர் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் பரிமாறி, செவிலியர்களை வைத்து ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்ப்பதாகக் குற்றம்சாட்டி அப்பெண்ணின் உறவினர்கள், பிரபல தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,  ரத்தினபுரியிலுள்ள சம்பத் வீதியில் வசித்து வருபவர்  ரங்கராஜ். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா (23).  கர்ப்பிணியான இவரை புலியகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
 
இந்நிலையில் கடந்த 3 ஆம்தேதி நித்யா பரிசோதனைக்குச் சென்றார். அப்போது அங்குள்ள செவிலியர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இதனையடுத்து மருத்துவமனையி அவசரம் அவசரமாக அனுமதிப்பட்ட கர்ப்பிணிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.பின்னர் சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமாகி வேறுஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.அங்கு  தற்போது குழந்தைக்கு தீவிரமாக  சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
 
இந்நிலையில் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால்தான் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
 
இதுகுறித்து நித்யா கூறியதாவது :
 
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின், செவிலியர்கள் தான் எனக்குப் பிரசவம் பார்த்தனர்.அப்போது செவிலியர் புகைப்படம் எடுத்து டாக்டருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினார். அவர் சொல்ல சொல்லத்தான் எனக்கு சிகிச்சை அளித்தனர் என்றார். 
 
ஆனால் இதை மறுத்துள்ள மருத்துவர்கள் , பிரசவத்தின் போது  குழந்தையின் நஞ்சுக்கொடி பிரிந்ததால்தான் குழந்தையின் இதயத்துடிப்பு குறைவாகத்துடித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
 
வாட்ஸ் ஆப் மூலமாக பிரசவம் பார்த்ததாக வெளியான இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.251-க்கு 102 ஜிபி டேட்டா: ஜியோவின் சூப்பர் டூப்பர் ரீசார்ஜ்!!