Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலிண்டரை தூக்கி அடித்ததில் மனைவி பலி! தூக்கில் தொங்கிய கணவன் ...

Advertiesment
Wife kills
, செவ்வாய், 4 ஜூன் 2019 (13:24 IST)
கோவை மாவட்டம் அடுத்த வேடப்பட்டியில் வசித்துவந்தவர் மாரிமுத்து(65).இவர் பூ மார்கெட் பகுதியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்துவந்தார். இவருடன் சுப்பாத்தாள் (60)மனைவி (இரண்டாவது மனைவி) வசித்துவந்தார். 
இந்தத் தம்பதியினருக்குக் குழந்தை இல்லை என்று தெரிகிறது.  இவர்கள் இருவருடன் மாரிமுத்துவின் தம்பி கிருஷ்ணனும் வசித்துகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனபதால் வீட்டிலேயே இருந்தார்.
 
இந்நிலையில் நேற்று அதிகாலையில் தம்பதியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சுப்பாத்தாள் தூங்கச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் மாரிமுத்து தூங்கிக்கொண்டிருந்த சுப்பாத்தாள் மீது சமையல் சிலிண்டரை தூக்கி வீசி அடித்தார். இதில் சுப்பாத்தாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
பின்னர், குற்றவுணர்ச்சி  மேலிட்ட மாரிமுத்து தன் வீட்டு வாசலிலேயே பந்தலில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். 
 
மனைவியைக்கொன்று கணவன் தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வானத்தில் பறந்து செல்லும் ரயில்: வைரலாகி வரும் வீடியோ