அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி அதிமுக கட்சியின் சார்பில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, இன்று ஏழுமணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக ஓ,. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதனால் மீடியாக்கள் பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில், அதிமுகவின் மூத்த தலைவரும் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவில் போட்டி என்பதே கிடையாது எனவும், அடுத்த முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் எனத்தெரிவித்துள்ளார். ஆனால் தேனியின் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுமுன் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக அடுத்த . முதல்வர் ஒ.பிஎஸ் என்று குரல் கொடுத்துவருகின்றனர்.