Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயதானதால் சிறுவனை உதவிக்கு அழைத்தார்: எடப்பாடியார் விளக்கம்!

Advertiesment
வயதானதால் சிறுவனை உதவிக்கு அழைத்தார்: எடப்பாடியார் விளக்கம்!
, சனி, 8 பிப்ரவரி 2020 (15:45 IST)
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடி சிறுவனை தனது காலணிகளை அகற்ற வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது பேரன் போல அந்த சிறுவனை நினைப்பதாகவும், எந்த உள்நோக்கத்தோடும் அதை செய்யவில்லை என்றும் விளக்கமளித்திருந்தார். இதுகுறித்து அந்த சிறுவன் மற்றும் பெற்றோர்களையும் அழைத்து தனது வருத்தத்தை தெரிவித்தார் அமைச்சர்.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்ந்தவர். தன்னால் குனிந்து காலணியில் சிக்கிய குச்சியை எடுக்க முடியாததால் பேரன் போல இருந்த சிறுவனை அழைத்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து பலரும் பெரிதுப்படுத்தி பேசுவது வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு புடவையால் நின்ற கல்யாணம் – நம்பமுடியவில்லையா ?