ஊரடங்கு உத்தரவை முழுமையாக 21 நாட்கள் கடைபிடிப்பவர்களுக்கு பல்வேறு பரிசுகளை திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக வழங்குவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதாக மக்கள் தொடர்ந்து வெளியே சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசும், காவல் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விடுத்துள்ள பரிசு அறிவிப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு குலுக்கல் முறையில் ஃபிர்ட்ஜ், பீரோ மற்றும் குக்கள் ஆகியவை திண்டுக்கல் மாநகராட்சி சார்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் சமூக இடைவெளியை மிக சரியாக கடைபிடிக்கும் 108 பெண்களுக்கு சேலை வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கலில் மக்கள் கூட்டமாய் வெளியே திரிவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.