முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் அக்டோபர் 7ம் தேதி யார் முதல்வர் வேட்பாளார் எப்பதை அறிவிப்பார்கள் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு கூடிய இந்த கூட்டம் 5 மணி நேரத்திற்குப் பின்னர் சற்று முன்னர் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுகவில் உள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முதல்வர் வேட்பாளர் குறித்த ஆலோசனையை தொடங்கியபோது கூச்சல் குழப்பங்கள் ஏற்படுத்தியதால் முதல்வர் வேட்பாளர் குறித்து ஒருமித்த முடிவு எடுக்காமலேயே கூட்டம் முடிவடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து வரும் அக்டோபர் 7ம் தேதி அறிவிப்பார்கள்!" அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் 5 மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் இயற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவில் சர்ச்சை ஓரளவுக்கு தீர்ந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.