Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரியில் குமரி ஆனந்தனா?: காங்கிரஸ் இன்று அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (09:11 IST)
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிக்க இருக்கிறது.

தமிழகத்தின் சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளான திமுக- காங்கிரஸ் தங்களுக்குள் தொகுதி பங்கீடு செய்து கொண்டுள்ளன. அதன்படி நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் இன்று தனது வேட்பாளரை அறிவிக்க உள்ளது. தமிழக காங்கிரஸின் மூத்த உறுப்பினரும், தமிழிசை சௌந்தர்ராஜனின் தந்தையுமாகிய குமரி ஆனந்தனும் வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.

நாங்குநேரியில் முன்னால் எம்.எல்.ஏவாக இருந்த வசந்தகுமார் காங்கிரஸில் பல நாள் உறுப்பினர். தற்போது மீண்டும் பல வருட முக்கிய உறுப்பினராக இருக்கும் குமரி ஆனந்தனுக்கு சீட் வழங்கப்படலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. அதேசமயம் பாஜக தலைவரின் தந்தை என்ற பெயர் பெற்றிருப்பதால் அவரை நிறுத்துவது கட்சிக்கு எதிர்மறையான தாக்கங்கள் உருவாக்கலாம். மேலும் காங்கிரஸில் பலநாட்களாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை என்ற குற்றசாட்டு தேசிய அளவில் உள்ளது. எனவே இளைய காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரையாவது நிறுத்தலாம் எனவும் காங்கிரஸ் மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments