மத்திய பிரதேசத்தில் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள நபர்களை குறிவைத்து பெண்கள் கும்பல் பாலியல் வீடியோக்களை படம்பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பெண்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்று கிட்டத்தட்ட 4000 ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வைத்திருந்துள்ளது. அந்த வீடியோக்களில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், சமூகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள நபர்கள் என அனைவரின் வீடியோவும் இருந்துள்ளது.
இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது, தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியஸ்தர்களை பெண்கள் தங்களது வலையில் வீழ்த்தி ஆபாசத்தில் ஈடுபடும்போது அதை கேமராவில் பதிவு செய்து வைத்து கொண்டு, அந்த வீடியோ வைத்து அந்த நபரை மிரண்டி பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பிரதேஅ ஏடிஜிபி சஞ்சீவ் சமி தலைமையிலான விசாரணை குழு மேற்கொண்ட விசாரணையின் முடிவில், இதில் பாஜகவினரை குறிவைத்து பல வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியினரின் சிலரின் வீடியோக்களும் இதில் உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ விவகாரம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு மீதான தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இஞ்சினியர் ஒருவர் கொடுத்த பெயரில் விசாரித்த போது, இதன் பின்னணில் உள்ள பூதாகராமான விஷயங்கள் வெளியே வந்துள்ளது.