கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு கைது செய்த போலீசார்..!

Siva
செவ்வாய், 4 நவம்பர் 2025 (08:16 IST)
கோவை கூட்டு பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல்துறையினர் இன்று அதிகாலை அதிரடியாக என்கவுண்டர் செய்து சுட்டு கைது செய்தனர். கைது நடவடிக்கையின்போது, குற்றவாளிகள் காவல்துறை அதிகாரியை அரிவாளால் தாக்கியதால், தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
 
கோவை விமான நிலையப் பகுதியில் காரில் சென்ற கல்லூரி மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தவசி, கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்களை தேடிக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்திருந்தனர்.
 
மூவரும் தேதியாலூர் கோவில் அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் அங்கு அவர்களை வளைத்து பிடித்தனர். குற்றவாளிகளை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் சரணடைய மறுத்து, தலைமை காவலர் சந்திரசேகர் என்பவரை அரிவாளால் கடுமையாக தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி, தற்காப்புக்காகப் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மூன்று குற்றவாளிகளும் காயமடைந்தனர்.
 
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த குற்றவாளிகள் மூவரும், அரிவாள் வெட்டில் காயமடைந்த தலைமைக் காவலர் சந்திரசேகர் ஆகியோரும் உடனடியாகக் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகளுக்கு ஆசைப்பட்டு ரூ.11.95 லட்சம் ஏமாந்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

தமிழகம் உள்பட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டவர் விடுத்தவர் ஐடியில் பணிபுரியும் இளம்பெண்ணா? அதிரடி கைது..!

பிரேசில் புகைப்பட கலைஞரின் இன்ஸ்டாகிராம் கணக்கு நீக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டால் ஏற்பட்ட சிக்கல்!

பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வைரல்.. அவமானத்தில் தற்கொலை செய்த இளைஞர்..

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன்.. டிரம்ப் அறிவிப்பு.. அப்ப மோடி கலந்து கொள்வாரா?

அடுத்த கட்டுரையில்