கோவை விமான நிலையம் அருகிலுள்ள பகுதியில், சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடந்துள்ளது. சட்டக் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள், அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் காவல்துறைக்கு புகாரளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவியையும், அவரது நண்பரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூன்று மர்ம நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கோவை காவல்துறை தெரிவித்துள்ளது.