நீக்கப்பட்டவர்கள் புதிய புதிய வாக்காளர்களுக்கான படிவத்தை பயன்படுத்தலாமா? முக்கிய தகவல்..!

Siva
ஞாயிறு, 21 டிசம்பர் 2025 (10:57 IST)
சென்னையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 14.25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விடுபட்ட மற்றும் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களை மீண்டும் பட்டியலில் இணைத்துக்கொள்ள, புதிய வாக்காளர்களுக்கான 'படிவம் 6'-ஐ பயன்படுத்துவது சட்டரீதியாக செல்லுமா என்ற கேள்வியை பாஜக எழுப்பியுள்ளது.
 
சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில், பாஜக மாநில செயலாளர் கராத்தே ஆர். தியாகராஜன் இக்கேள்வியை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த தேர்தல் சிறப்புப் பார்வையாளர் ராமன்குமார், தற்போதுள்ள நடைமுறைப்படி அந்த படிவத்தையே பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாகவும், இது குறித்துத் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.
 
அதிமுக சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், யாருக்கும் வாக்குரிமை மறுக்கப்பட கூடாது என்றும், விடுபட்டவர்களை சேர்க்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
 
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம்களில் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்ட நிலையில், இந்தச் சட்டச் சிக்கல் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் இனிமேல் நடிகர் அல்ல, அவர் ஒரு முழுநேர அரசியல்வாதி: அருண்ராஜ்

97 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்: SIR-ஐ எதிர்த்த அரசியல் கட்சிகளின் மௌனம் ஏன்?

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஒரு ஜனநாயக சுத்திகரிப்பு: ரங்கராஜ் பாண்டே கருத்து..!

இறந்த 4 மாத குழந்தையை கட்டப்பையில் தூக்கி சென்ற அவலம்.. மருத்துவமனையின் அலட்சியமா?

நீக்கப்பட்டவர்கள் புதிய புதிய வாக்காளர்களுக்கான படிவத்தை பயன்படுத்தலாமா? முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments