Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெத்தியடி பதில் சொல்லியிருக்கார் ரஜினி – சப்போர்ட்டுக்கு வந்த அர்ஜுன் சம்பத்!

Advertiesment
நெத்தியடி பதில் சொல்லியிருக்கார் ரஜினி – சப்போர்ட்டுக்கு வந்த அர்ஜுன் சம்பத்!
, வெள்ளி, 8 நவம்பர் 2019 (12:43 IST)
பாஜகவினர் தனக்கு காவி சாயம் பூச முயல்வதாக ரஜினி பேசியதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்.

ரஜினி பாஜகவில் இணைவார் என தொடர்ந்து பேசப்பட்டு வந்த நிலையில் அந்த கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த் ”திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல எனக்கும் பூச முயல்கிறார்கள். மதம் சார்ந்த அரசியல் செய்ய நான் வரவில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இந்த திடமான கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் பாஜகவின் பி அணி என்ற கூற்றை கமல் உடைத்தது போல, இன்று ரஜினி மீதான பாஜக பிம்பத்தை ரஜினியே உடைத்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் “காவி நிறம் என்றால் தீவிரவாதம் என்ற அடையாளத்தை மாற்றும் வகையில் நெற்றியடி பதிலை சொல்லியிருக்கிறார் ரஜினி” என்று கூறியுள்ளார்.

ஆனால் அரசியல்ரீதியாக பார்த்தால் அர்ஜுன் சம்பத்தே மதரீதியான அரசியலில் இருந்து கொண்டு ரஜினிகாந்த் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கும் காவிக்கும் செட் ஆகாது... ரஜினி ஓபன் டாக்!!