Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனக்கும் காவிக்கும் செட் ஆகாது... ரஜினி ஓபன் டாக்!!

Advertiesment
எனக்கும் காவிக்கும் செட் ஆகாது... ரஜினி ஓபன் டாக்!!
, வெள்ளி, 8 நவம்பர் 2019 (12:26 IST)
என் மீது பாஜக சாயம் பூச முயற்சிக்கிறார்கள் , ஆனால் நான் அதில் மாட்ட மாட்டேன் என ரஜினிகாந்த் அதிரடியாக பேட்டியளித்துள்ளார். 
 
சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர்.
 
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் எனக்கும் காவிக்கும் செட் ஆகாது என அதிரடியாக பேசியுள்ளார். ரஜினி கூறியதாவது, என்னை பாஜக உறுப்பினராக நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.  பாஜக் தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை.  திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன்.
 
பேச வேண்டிய பல பிரச்சனைகள் இருக்கும் போது திருவள்ளுவரை சர்ச்சையாக்குவது அற்பத்தனமாக உள்ளது. திருவள்ளுவர் நாத்திகர் இல்லை, ஆத்திகர். அவரது குறளை பார்த்தாலே இது தெரியும். அதேபோல உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என ரஜினிகாந்த பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டாலின் கைது குறித்த ஆதாரங்களை வெளியிடுவேன்: மாஃபா பாண்டியராஜன்