Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணை நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தம்

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (10:30 IST)
மத்திய அரசின் எண்ணை நிறுவ னங்களில் பணியாற்றிம் அதிகாரிகள் சங்கம ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த ி இன்று முதல ் காலவரையற் ற வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

இதனால் நாடு முழுவதும ் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விநியோகம ் உள்ளிட்டவை பாதிக்கப்படும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில ் உள் ள எண்ணை சம்மந்தப்பட்ட 15 பொதுத்துறை நிறுவனங்கள ் மற்றும ் கச்சா எண்ணை உற்பத்தி நிலையங்கள ், சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகி யற்றில் சுமார ் 45 ஆயிரம் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள், சம்பள உயர்வு வழங்க வேண்டும், 2005 ஜனவரி 1- ம ் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 50 விழுக்காட ு பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர்.

அதிகாரிகளின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக தினசரி ரூ.1,400 கோடி இழப்பு ஏற்படலாம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் உற்பத்த ியும் பாதிக்கும். இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருள ை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானங்களுக்கான எரிபொருள் சேவையும் பாதிக்கும் அபாயம் உண்டு.

இதற்கிடையே போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயற்சி நடந்து வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி ய ஓ.என்.ஜி.சி. தலைவர் ஆர்.எஸ்.சர்ம ா, கடந் த2 நாட்களாக அதிகாரிகள் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களுடைய கோரிக்கைகள் தகுதி அடிப்படையில் ஏற்கப்படும் என்றும் இடைக்கால நிவாரணம், ஊக்கத்தொகை, மாத அலவன்ஸ் வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

ஆனால் இந்த இடைக்கால நிவாரணத்தை அதிகாரிகள் சங்கம் நிராகரித்துவிட்டது.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments