Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எல்லாத்தையும் விட்டு வந்துட்டேன்!.. இனிமே அரசியல்தான்!.. வேட்பாளர்களிடம் உருகிய விஜய்!..

Advertiesment
tvk vijay
விஜய் அரசியல் கட்சி துவங்கி 2 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அவர் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. விஜய் அரசியலுக்கு வந்தது முதலே பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.. துவக்கத்தில் அவரை பனையூர் பண்ணையார்.. பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்கிறார்.. என்றெல்லாம் திமுகவினர்கள் கலாய்த்தார்கள்.

அதன்பின் கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த போது மொத்த பழியையும் தூக்கி விஜய் மீது போட்டார்கள். இதற்கு விஜய முழுக்க முழுக்க காரணம் என அவரை மனரீதியாக முடக்கினார்கள். அதன்பின் சம்பந்தப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை என்று அவரை திட்டி தீர்த்தார்கள்..

ஒருபக்கம் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றார்.. மேலும் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பு புகார்களை கூறினார்.. இதை வைத்தும் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தனர்.. அதோடு, இது நடந்து சில நாட்களிலேயே விஜய் திரிஷாவோடு திருமண விழாவில் கலந்துகொண்டது சர்ச்சையானது. விஜய் இப்போது மனைவி, மகன், மகள் யாருமின்றி தனியாகவே வசித்து வருகிறார். மகன், மகள் இருவரும் சென்னையிலும், மனைவி லண்டனிலும் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான், சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று பனையூர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது கட்சி நிர்வாகிகளுடன் பேசிய விஜய் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்து விட்டேன்.. இனி அரசியலைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை.. எனவே, வெற்றியை நீங்கள் எனக்கு பரிசாக கொடுக்க வேண்டும்’ என சொன்னதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை முடியாது.. டெல்லிக்கு வாங்க!. விஜயை விடாம விரட்டும் சிபிஐ!...