Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல் - கய்டா ஒழிக்க : பாக். அமெரிக்கா கூட்டு

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2007 (12:27 IST)
பாகிஸ்தானிலிருந்து அல் - கய்டா தீவிரவாதிகளை விரட்டியடிக்க பாகிஸதானுடன் இணைந்து அமெரிக்கா கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் அல் - கய்டா தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை அந்நாட்டு ராணுவம் சுட்டு கொன்றதையடுத்து, அங்கு தற்கொலைப் படை தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களை ஒடுக்க அமெரிக்க அனைத்து வித உதவிகளை செய்து தர தயார் என்று அமெரிக்க அறிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டோனி ஸ்னோ, பாகிஸ்தானில் தீவிரவாதிகளை ஒழிக்க அதிபர் முஷரப் அதிகளவில் முக்கியத்துவம் தர வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக கூறினார்.

பாகிஸ்தானில் தீவிரவாதத்தை கடுப்படுத்த அந்நாட்டுக்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் செய்து தர தயாராக இருப்பதாகவும் அவர் கூரினார்.

பாகிஸ்தான் எல்லையில் பதுங்கி இருக்கும் அல் - கய்டா தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தானுடன், அமெரிக்கா கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

இந்த மாதம் சிலிண்டர் விலை குறைப்பு! விலை நிலவரம் எவ்வளவு?

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

Show comments