Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை 164 புள்ளிகள் உயர்வு!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (20:14 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்த நிலைமை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாறியது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு எல்லா பிரிவில் உள்ள பங்குகளின் விலைகளும் படிப்படியாக அதிகரிக்க துவங்கின.

முதலீட்டு நிறுவனங்களும், மற்ற பிரிவு முதலீட்டாளர்களும் அதிகளவு பங்குகளை வாங்கினார்கள். இதனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 164.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் இதற்கு முன்பு இல்லாத வகையில் 20,465.30 புள்ளிகளாக அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் ஒரு நிலையில் சென்செக்ஸ் 20,077.40 புள்ளிகளாக குறைந்தது. இதற்கு நேர்மாறாக 20,529.48 புள்ளிகளாக அதிகரித்தது. இதற்கு முன் அதிகபட்சமாக டிசம்பர் 13 ஆம் தேதி சென்செக்ஸ் குறியீட்டு எண் 20,498.11 புள்ளியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 35.05 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 6,179.40 ஆக உயர்ந்தது. இன்று வர்த்தகம் நடந்த போது ஒரு நிலையில் நிஃப்டி 6,197 புள்ளிகளை தொட்டது. இதற்கு மாறாக 6,060.85 புள்ளிகளாக குறைந்தது.

இதற்கு முன் டிசம்பர் 13 ஆம் தேதி நிஃப்டி 6,185.40 புள்ளிகளை தொட்டது. இதே போல் டிசம்பர் 12 ந் தேதி 6,159.30 புள்ளிகளில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று ரியல் எஸ்டேட், வங்கிகள், பெட்ரோலிய நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உலோக உற்பத்தி நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 205.90, மிட் கேப் 123.91, பி.எஸ்.இ-500 105.10 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று ரியல் எஸ்டேட் நிறுவன பங்கு பிரிவு குறியீட்டு எண் 381.78, வங்கி பிரிவு 300.18, பொதுத் துறை பிரிவு 140.43, பெட்ரோலிய நிறுவனங்கள் 110.24, உலோக உற்பத்தி பிரிவு 99.36, மருந்து உற்பத்தி 55.86, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு பிரிவு 22.03 புள்ளிகள் அதிகரித்தது.

இயந்திரங்கள் உற்பத்தி நிறுவன பிரிவு 40.55, தகவல் தொழில் நுட்ப பிரிவு 20.46 புள்ளிகள் குறைந்தது.

நாளை மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 20,500 புள்ளிகளை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பிறகு குறியீட்டு எண் குறைவதுடன், சில நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைய வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு வர்த்தகர்கள் மத்தியில் நிலவுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன ஒரு புத்திசாலித்தனம்? Password-யே பாஸ்வேர்டாக வைத்த 30+ லட்சம் இந்தியர்கள்! ஈஸியா ஹேக் பண்ணிடலாம்? - அதிர்ச்சி தகவல்!

எல்லோரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது.. விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

சென்னையில் ஞாயிறு வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

கடற்கரையில் பக்தர்கள் தங்க கூடாது: திருச்செந்தூர் காவல்துறை தடை..!

ஊட்டிக்கு வரப்போகிறது ஹைட்ரஜன் ரயில்.. ஒரு ரயில் உருவாக்க இத்தனை கோடியா?

Show comments