Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியை திருமணம் செய்ய போராட்டம் நடத்தி வரும் பெண்...

மோடியை திருமணம் செய்ய போராட்டம் நடத்தி வரும் பெண்...
, சனி, 7 அக்டோபர் 2017 (11:27 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் ஒரு பெண் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஓம் சாந்தி சர்மா (40). இவர் மோடியை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் எனக்கூறி, அவருடைய படத்துடன், டெல்லி ஜந்தர் மந்தரில்  கடந்த ஒரு மாத காலமாக, அதாவது கடந்த செப்டம்பர் 8ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்.
 
எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால், அது நெடுநாள்  நீடிக்கவில்லை. நான் தனியாக இருக்கிறேன். என்னைப் போலவே மோடியும் தனியாக இருக்கிறார். எனவே, அவருக்கு சேவை செய்வதற்காகவே அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். 
 
சிறு வயதிலிருந்து பெரியவர்களை மதிக்க வேண்டும் என என் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்துள்ளனர். நான் மோடியை மதிக்கிறேன். என்னை பார்ப்பவர்கள் நான் மன நோயாளி என நினைத்து சிரிக்கிறார்கள். என்னுடைய மனநிலை நன்றாகவே இருக்கிறது.
 
பேராசைக்காக நான் மோடியை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. எனக்கு ஏராளமான நில புலன்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் விற்று கூட நான் மோடியை பார்த்துக் கொள்வேன். 
 
அவரை சந்திக்க யாரும் என்னை அனுமதிப்பதில்லை. அதனால்தான், போராட்டம் நடத்தி வருகிறேன். மோடி என்னை வந்து சந்திக்கும் வரை எனது போராட்டம் தொடரும்” என ஓம் சாந்தி சர்மா அதிரடியாக பேசுகிறார்.
 
முதல் கணவர் மூலம் அவருக்கு 20 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடராஜனை இன்று சந்திக்க செல்லும் சசிகலா...