Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெங்கு காய்ச்சலில் பெண் மரணம் ; உடலை கைகளால் தூக்கி சென்ற அவலம்

Advertiesment
டெங்கு காய்ச்சலில் பெண் மரணம் ; உடலை கைகளால் தூக்கி சென்ற அவலம்
, புதன், 4 அக்டோபர் 2017 (13:01 IST)
டெங்கு காய்ச்சலில்  மரணமடைந்த பெண்ணை, அவரது கணவரும், மகனும் கைகளாலேயே சுமந்து சென்ற சம்பவம் மணப்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக மரணமடைந்தவர்களின் உடலை எடுத்து செல்ல, அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்து, இறந்தவர் உடலை உறவினர்களை தோள்களில் தூக்கி சுமந்து சென்ற சம்பவங்கள் உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏரளமாக நடந்துள்ளது.
 
தற்போது அதேபோன்ற சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புதுப்பட்டியில் வசித்து வந்தவர் சின்னப்பொண்ணு. இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
 
எனவே, அவரது உடலை எடுத்து செல்ல அவரின் கணவன் மற்றும் மகன் ஆகியோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், ஆம்பலன்ஸ் வசதி இல்லை என நிர்வாகம் மறுத்துவிட்டது. எனவே, சின்னப்பொண்ணுவின் உடல் மருத்துவமனை வளாகத்திலேயே 6 மணி நேரம் வைக்கப்பட்டது. 
 
அதன்பின் புதுக்கோட்டையிலிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், அந்த வண்டியில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார். உடலை எடுத்து செல்லும் ஸ்டெக்சர் வசதி இல்லை. இதனால், விரக்தியடைந்த  சின்னப்பொண்ணுவின் கணவரும், மகனும் அவரது உடலை கைகளால் தூக்கியபடி தங்களது வீட்டிற்கு நடந்தே சென்றனர்.
 
இதனைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், தமிழக அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் டெங்கு காய்ச்சல் குறித்து தவறான கருத்துகளை கூறி வருவதாக புகார் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுக்கடை வேண்டும் என வலியுறுத்தி மது குடித்து போராடியவர் மரணம்