Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

அடுத்த தேர்தலில் மோடிக்கு பதில் யோகி பிரதமர் வேட்பாளரா?

Advertiesment
yogi
, வெள்ளி, 6 அக்டோபர் 2017 (05:09 IST)
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், மேற்குவங்கம் தவிர இந்தியா முழுவதும் மோடி அலை வீசியதால் தனி மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் மோடி பிரதமர் ஆன பின்னர் எடுத்த ஒருசில நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு கெட்ட பெயரையே கொடுத்துள்ளது.



 
 
உதாரணமாக பணமதிப்பிழப்பு விவகாரத்தினால் பொருளாதார வளர்ச்சி குறைந்தது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஜிஎஸ்டி வரிவிதிப்பு வியாபாரிகளிடம் இருந்து மட்டுமின்றி பொதுமக்களுக்கும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுக்கறி உள்பட பல விஷயங்களில் மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் வரும் 2019ஆம் தேர்தலில் மோடிக்கு பதில் யோகி முன்னிறுத்தப்படுவார் என தெரிகிறது
 
அதன் தொடக்கமாக கேரளாவில் நடைபெறும் பாஜக போராட்ட பேரணியில் யோகி கலந்து கொள்கிறார். மிக விரைவில் தமிழகம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் யோகி வருகை தந்து பாஜகவினர்களுக்கு ஊக்கத்தை அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. யோகி மீது தாஜ்மஹால், ஆக்சிஜன் போன்ற பிரச்சனைகளில் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அவருடைய அதிரடி நடவடிக்கைகள் மக்களை கவர்ந்துள்ளன என்பது உண்மை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருவருக்குத்தான் தாலி கட்ட முடியும், ரெண்டு பேருக்கு எப்படி தாலி கட்டுவது? மன்சூர் அலிகான்