Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்ய தயார்; இறங்கி வந்த மோடி

ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்ய தயார்; இறங்கி வந்த மோடி
, வியாழன், 5 அக்டோபர் 2017 (12:04 IST)
சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி வரியில் திருத்தம் செய்ய தயார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 5.7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் மோடி மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவும் குற்றம்சாட்டி வருகிறார்.
 
இந்நிலையில் உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்திருப்பதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கம்பெனி செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது:-
 
நாட்டின் வளர்ச்சி மந்த நிலையில் இருப்பதை அரசு உணர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தற்போதை விட உள்நாடு உற்பத்தி விகிதம் குறைவாக இருந்துள்ளது. இந்தியாவை வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றியதே நாங்கள்தான். 
 
சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாங்கள் எடுக்கும் முடிவுகளால் இந்தியா புதிய வளர்ச்சி பாதையை நோக்கி நடைபோடும். ஜி.எஸ்.டி வரி விதிப்பில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திகும் இடையூறுகளை கண்டறிந்து அகற்றுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிவுறுத்து உள்ளேன். 
 
சிறு வியாபாரிகளுக்கு உதவ ஜி.எஸ்.டி. வரியில் திருத்தம் செய்யவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் பிறப்பால் தான் பார்ப்பனன்; காவி என் மனதில் இல்லை: கமல் அதிரடி!