பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

Mahendran
திங்கள், 17 நவம்பர் 2025 (10:08 IST)
சமீபத்தில் பிகார் சட்ட பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற அமோக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து 2027ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலைச் சந்திக்கவுள்ள உத்தரப் பிரதேசத்தின் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் 'இந்தி' கூட்டணியின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
 
உ.பி.யில் சமாஜவாதி கட்சியும் காங்கிரஸும் பிரதான பங்குதாரர்களாக உள்ள நிலையில், பிகார் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா, பிகார் வெற்றி உ.பி.க்கான ஒரு முன்னோட்டம் என கூறியுள்ளார்.
 
பிகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை விமர்சித்ததோடு, அக்கட்சி பிளவை நோக்கி செல்வதாகவும் கருத்துத் தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவை விமர்சித்தாலும், அதன் தேர்தல் வியூகங்களில் இருந்து எதிர்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
 
2024 மக்களவை தேர்தலில் இந்தச் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி உ.பி.யில் 43 இடங்களை கைப்பற்றியது. இந்த சூழலில், பிகார் தோல்விக்கு பிறகு, 2027 பேரவை தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா என்ற கேள்வி உ.பி. அரசியல் அரங்கில் வலுவாக எழுந்துள்ளது. 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments