சபரிமலைக்கு மண்டல பூஜை காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்ற நிலையில், சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கேரளாவில் மூளையை தாக்கும் அமீபா காய்ச்சல் பரவி வரும் நிலையில், பம்பையில் நீராடும் பக்தர்கள் மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏனெனில், நீரில் பூச்சிகள் ஏதேனும் இருந்தால் அவை மூக்கிற்குள் நுழைந்து விடுவதை தடுக்கும் வகையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் இந்த கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அமீபா காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள சுகாதாரத் துறை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.