செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

Mahendran
திங்கள், 17 நவம்பர் 2025 (10:04 IST)
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்ட அளவு 24 அடியாக உள்ள நிலையில், தற்போது நீர்மட்டம் 21.39 அடியாகவும், நீரின் இருப்பு 3,645 மில்லியன் டன் அடியாகவும் உள்ளது.
 
வரும் நாட்களில் கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மனதில் கொண்டு, ஏரியில் பாதுகாப்பான நீர்மட்டத்தை பராமரிப்பதற்காகவும், வெள்ள அபாயத்தை தவிர்க்கும் நோக்கிலும் உபரி நீர்த் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்.ஐ.ஆர் பணிச்சுமை அதிகம்.. உயிரை மாய்த்துக் கொண்ட பி.எல்.ஓ.. பெரும் அதிர்ச்சி..!

அறிவு இருக்கிறவன் அறிவு திருவிழா நடத்துகிறான்.. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி..!

இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments