இன்று கார்த்திகை 1ஆம் தேதி.. சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு..!

Siva
திங்கள், 17 நவம்பர் 2025 (08:33 IST)
இன்று கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதை  அடுத்து சபரிமலைக்கு மாலை அணியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இன்று அதிகாலை 3 மணிக்கு சன்னிதானம் திறக்கப்பட்டு மண்டல பூஜைகள் தொடங்கின. இதுவரை 30,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து முடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
இன்று அதிகாலை முதல் சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பெரிய நடை பந்தல், சிறிய நடைபந்தல் போன்ற இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.
 
மேலும், கார்த்திகை ஒன்றாம் தேதி பிறந்ததை அடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர் என்பதும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை - மங்களூரு இடையே முதல் ரயில்..!

மகனை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் சேர பெற்ற தாயே கூறினாரா? லிவ்-இன் துணைவர் தூண்டுதலா?

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments