தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை! நவம்பர் 23 வரை கனமழை பெய்யும்..!

Siva
திங்கள், 17 நவம்பர் 2025 (08:29 IST)
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி விட்டதாலும், வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் இன்று காலை முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில், காலை 10:00 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், கனமழை காரணமாக நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல், காரைக்காலில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments