Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கைக் கிடைக்காமல் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த குழந்தை! ஆந்திராவில் தொடரும் சோகம்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (11:39 IST)
ஆந்திராவில் கொரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயது குழந்தை ஜான்விதாவுக்கு ஒருவாரமாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தையை கே.ஜி.எச். அரசு மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்ற நிலையில் அங்கு குழந்தைக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக் கிடைக்கவில்லை. ஏற்கனவே எல்லா படுக்கைகளும் நிரம்பிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மருத்துவமனைக்கு வெளியிலேயே குழந்தையின் பெற்றோர் இரண்டு மணிநேரமாக காத்திருந்துள்ளனர். ஆனால் படுக்கைக் கிடைக்கும் முன்னதாகவே குழந்தை ஆம்புலன்சிலேயே உயிரிழந்துள்ளது.

இதனால் மருத்துவமனை வாசல் முன்பாகவே குழந்தையின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவமானது சமூகவலைதளங்களில் வெளியாகி அனைவர் மனதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments