Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1.5 கோடி தடுப்பூசிகள் வாங்க முதல்கட்ட திட்டம்… தமிழக அரசு அறிவிப்பு!

Advertiesment
1.5 கோடி தடுப்பூசிகள் வாங்க முதல்கட்ட திட்டம்… தமிழக அரசு அறிவிப்பு!
, புதன், 28 ஏப்ரல் 2021 (11:18 IST)
தமிழகம் முதல் கட்டமாக 1.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் ‘இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை (27.04.2021), 55.51 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், வரும் மே 1-ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தவாறு, இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதற்கட்டமாக 1.5 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC ) மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்ஸாமில் வலுவான நிலநடுக்கம்!