இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை மற்றும் புதிய பணி நேர விதிகள் காரணமாக 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
டெல்லி - மும்பை போன்ற பரபரப்பான வழித்தடங்களில் ஒருநாள் பயணம் செய்து திரும்பும் எக்னாமிக் வகுப்பு டிக்கெட்டின் விலை சுமார் ரூ.60,000 வரை உயர்ந்துள்ளது. சாதாரணமான நேரத்தில் இந்த டிக்கெட் விலை ரூ.20,000 மட்டுமே. . டெல்லி - ஐதராபாத் போன்ற வழித்தடங்களில் இது ரூ.48,000 வரை சென்றுள்ளது.
டெல்லி - கொல்கத்தா இடையே ரூ.85,000க்கு விற்கப்படும் இருவழிச் சீட்டு, டெல்லி - லண்டன் டிக்கெட்டைவிட அதிகம்.. டெல்லி - லண்டன் டிக்கெட் சுமார் ரூ.60,000 என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து உள்நாட்டு இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில் வேறு விமானங்களில் முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பயணிகள், இந்த அதிக விலையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.