இந்திய ராணுவம் பாலிவுட்டுக்கு கதை எழுதப் போகலாம்! - பாகிஸ்தான் ராணுவம் விமர்சனம்!

Prasanth K
வியாழன், 16 அக்டோபர் 2025 (09:10 IST)

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் குறித்து இந்தியா திரைப்பட பாணியிலான கதைகளை விடுவதாக பாகிஸ்தான் ராணுவம் விமர்சித்துள்ளது.

 

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்ட நிலையில், தங்கள் நாட்டிற்குள் அத்துமீறியதாக பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை நடத்தத் தொடங்க போர் மூண்டது.

 

பின்னர் இரு நாடுகளிடையேயான பேச்சுவார்த்தை மூலமாக போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில் 100க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றி என இந்தியா ஆதாரங்களோடு பேசி வந்தாலும், பாகிஸ்தான் தொடர்ந்து தாங்களே வெற்றி பெற்றதாக எல்லா பக்கமும் பேசி வருவதுடன், இந்தியாவையும் விமர்சித்து வருகிறது.

 

சமீபத்திய இந்திய ராணுவத்தின் அறிக்கை குறித்து விமர்சித்து பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான் ராணுவம், ‘இந்திய ராணுவம் தொடர்ந்து பொய், புரட்டுகளை பேசி வரலாற்றை திரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பதிலாக இந்திய ராணுவம் பாலிவுட் சினிமாக்களுக்கு கதை எழுதலாம்’ என விமர்சித்துள்ளது. இந்த விமர்சனத்திற்கு இந்திய ராணுவ தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments