இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

Siva
செவ்வாய், 20 மே 2025 (07:58 IST)
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தானுடன் சண்டை ஏற்பட்டதற்கு இந்தியா ஒப்புக்கொண்டது ஏன் என்பதை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்திய நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் வெளியுறவுத்துறைக்கான நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில், வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரா விளக்கம் அளித்தார். அப்போது, "இந்திய விமானப்படையின் எத்தனை விமானங்கள் சேதமடைந்தன?" என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதிலளித்த விக்ரம் மிஸ்ரா, "பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை தெரிவிக்க முடியாது," என தெரிவித்தார்.
 
மேலும், இந்தியா - பாகிஸ்தான் சண்டையில் அமெரிக்காவின் எந்தவிதமான தலையீடும் இல்லை என்றும் அவர் கூறினார். பாகிஸ்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் அனைத்தும் சீனா மற்றும் துருக்கி நாட்டிலிருந்து வாங்கப்பட்டவை என்றும் தெரிவித்தார்.
 
மேலும், சீனா மற்றும் துருக்கி நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் விக்ரம் மிஸ்ரா தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments