அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள் கர்நாடக மாநிலத்தில் இன்னொரு ஐபோன் உற்பத்தி மையத்தை திறக்கத் திட்டமிட்டுள்ளதாக, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்.பி. படில் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு பேசிய அவர், டைவானை சேர்ந்த Foxconn நிறுவனத்தின் டெவனஹள்ளியில் உள்ள தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தில் அமைந்துள்ள யூனிட், விரைவில் செயல்பாட்டுக்கு தயாராகும் என கூறினார்.
“ஜூன் மாத தொடக்கத்தில் வணிக ரீதியான ஐபோன் விநியோகம் தொடங்கும்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார். Foxconn, ஆப்பிள் நிறுவனத்துக்காக ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்கள் தயாரிக்கிறது.
“இந்த திட்டம் உற்பத்தித் துறையில் ஒரு பெரிய முன்னேற்றம் மட்டுமல்ல, இது ஒரு தொழில்துறையில் ஒரு முக்கிய மாற்றத்தையும் குறிக்கிறது. தற்போது இந்தியா, ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி மையமாக மாறி வருகிறது,” என அமைச்சர் படில் தனது X பக்கத்தில் பதிவிட்டார்.
அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தயாராகும் என தலைவர் டிம் குக், என உறுதி செய்தார்.
ஏற்கனவே பெங்களூரு சுற்றுவட்டாரத்திலுள்ள டொட்பல்லாபுரம் மற்றும் டெவனஹள்ளி தாலுக்களில் உள்ள ITIR பகுதியில் 300 ஏக்கர் நிலம் ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய தொழிற்சாலை அமைப்பதை தான் விரும்பவில்லை என சமீபத்தில் ட்ரம்ப் கூறிய நிலையில் அதை மதிக்காமல் இந்தியாவில் இன்னொரு தொழிற்சாலை அமைப்பேன் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது