Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

Siva
செவ்வாய், 20 மே 2025 (07:54 IST)
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி, ஏராளமான உயிரிழப்புகளையும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், இந்தியாவில் கொரோனா பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
நேற்றைய நிலைப்பாடு படி, மேற்கண்ட சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்  பகுதிகளில் 257 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருக்கும் லேசான பாதிப்புகளே உள்ளதாகவும், கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது, கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் தொற்று பரவுவது குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments