Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விண்ணை தொடும் உயரத்துக்கு ராமர் கோவில்! – அமித்ஷாவின் அடுத்த டார்கெட்!

Advertiesment
விண்ணை தொடும் உயரத்துக்கு ராமர் கோவில்! – அமித்ஷாவின் அடுத்த டார்கெட்!
, திங்கள், 16 டிசம்பர் 2019 (20:01 IST)
பாஜகவின் அரசியல் சாணக்கியர் என்று வர்ணிக்கப்படும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஜார்கண்ட மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முக்கிய தலைவர்களோடு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா ”ராம ஜென்மபூமி வழக்கை ஏன் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துசெல்ல வேண்டும் என்று கபில் சிபல் கேட்டார். இன்று உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்கிற 100 வருட கால இந்துக்களின் நம்பிக்கை நனவாக போகிறது.

எண்ணி 4 ஆண்டுகளில் விண்ணை தொடும் அளவுக்கு பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும்” என அவர் கூறினார்.

2014 தேர்தலின்போதே ராமர் கோவில் கட்டுவதை தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகவே பாஜக பரப்புரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2021லும் ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார்: ஒரு பிரபலத்தின் கணிப்பு!