Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வானளாவிய ராமர் கோவில் எப்போது கட்டப்படும்? அமித் ஷா பேட்டி!

வானளாவிய ராமர் கோவில் எப்போது கட்டப்படும்? அமித் ஷா பேட்டி!
, திங்கள், 16 டிசம்பர் 2019 (17:30 IST)
4 மாதத்தில் வானளாவிய ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என  அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்த நிலையில், ஜார்க்கண்டில் பாக்கூர் மாவட்டத்தில் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் எண்ணி 4 மாதங்களில் அயோத்தியில் வானளாவிய ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கும் என பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
அயோத்தி ராமர் கோவில் எப்படி இருக்கும்? 
ராமர் கோயிலின் கருவறையில் ராம் லல்லா என்று சொல்லப்படக்கூடிய குழந்தை ராமரின் சிலை மூலவராக வைக்கப்பட உள்ளது. ராம் தர்பார், பிரம்மாணட நுழைவு மண்டபமும் கட்டப்படவுள்ளது. 
webdunia
மார்பிள், கிரானைட், செங்கல், கருங்கல் போன்ற பலவித கற்களையும் கொண்டு வலுவான முறையில் கோவில் அமைய உள்ளது. தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களாக கோவில் அமையவுள்ளது.  
 
கோயில் 270 அடி நீளமும், 135 அடி அகலமும், 125 அடி உயரமும் கொண்டு அமைக்கப்படும். 2 மாடி கோவிலில் ஒவ்வொரு தளத்திலும் 106 தூண்கள் அமைக்கப்படும். கோயிலின் உட்புறத்தில் ராமரின் வரலாற்றை விளக்கும் வண்ண படஙள் வரையப்படும் என கூறப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமாதானத்துக்கு வந்த அமெரிக்கா! – வரியை குறைத்த சீனா!