குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு பலவகைகளில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அது இப்போது சினிமாத்துறையிலும் பிரதிபலிக்க ஆரம்பித்துள்ளது.
அறிமுக இயக்குனர் ஸக்காரியா முகமது இயக்கத்தில் பிரபல மலையாள இந்தாண்டு வெளியான திரைப்படம் சுடானி ப்ரம் நைஜீர்யா எனும் திரைப்படம். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் மாநில அரசின் விருதுகளில் ஐந்தைத் தட்டிச்சென்றது.
66-ஆவது இந்திய தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான விருதிற்காக இந்தத் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த விருதைப் புறக்கணிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் விதமாகவும் அதற்கெதிராக போராடும் மக்களுக்கு ஆதரவு தரும் விதமாகவும் இந்த விருதினைப் படக்குழு ஏற்கம்றுத்துள்ளது.