சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு விழாவின் இறுதியில் ’தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் தான் தனது இலக்கு என்றும் கூறியிருந்தார். அதன் பிறகு ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்து அந்த மன்றத்தின் ஒவ்வொரு மாவட்ட மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகிகளை அவர் நியமனம் செய்தார். தற்போது ரஜினி-மக்கள்-மன்றம் இல்லாத சின்ன கிராமம் கூட இல்லை என்பதே உண்மையான நிலையாக உள்ளது
இந்த நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு முன் ரஜினிகாந்த் கண்டிப்பாக கட்சி தொடங்குவார் என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்றும் அவரது நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒருசில அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் நெட்டிசன்களும் இன்னும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதில் நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அவர் தொடர்ச்சியாக படங்களில் நடித்துக் கொண்டிருப்பது,அரசியல் குறித்து அவ்வப்போது மட்டும் பேசிக் கொண்டிருப்பது ஆகியவை ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா? என்ற சந்தேகத்தை பலரது மனதில் எழுப்பியுள்ளது
இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் ரஜினிகாந்தின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்க்கும்போது அவர் 2021ல் கூடகட்சி தொடங்க மாட்டார் என்றே கணிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் உண்மையாகவே ரஜினி கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பதை 2021 வரை பொறுத்திருந்து பார்ப்போம்