Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Prasanth K
வியாழன், 12 ஜூன் 2025 (15:16 IST)

அகமதாபாத் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏர் இந்தியாவின் AI-171 விமானம் 200க்கும் மேற்பட்ட பயணிகளோடு லண்டனுக்கு புறப்பட்ட விமானம் அகமதாபாத் விமான நிலையம் அருகே மேகனிநகரில் விழுந்து விபத்திற்கு உள்ளானது. தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

 

விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு தேசிய பாதுகாப்பு படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் விரைந்துள்ளனர்.

 

இந்நிலையில் விமானம் விபத்திற்குள்ளான சமயத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் எதேச்சையாக கேமராவில் படம் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேக் ஆஃப் ஆன விமானம் மீண்டும் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இறங்கி செல்வதும் பின்னர் வெடித்து தீப்பிழம்புகளும், புகையும் எழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதனால் இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments