Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அமமுக ஆதரவு..! டிடிவி தினரன் அறிவிப்பு..!!

Senthil Velan
திங்கள், 11 மார்ச் 2024 (19:27 IST)
மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு, அமமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினரன் அறிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கூட்டணி அமைக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 
 
திமுக தலைமையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டு, அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடும் செயப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில் பாமக மற்றும் தேமுதிகவுடன் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
இந்த நிலையில், மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு, அமமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி தொடர்பாக பாஜகவிடம் கடந்த 6 மாதங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம் என்றும் எந்த உறுத்தலும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி சேர்கிறது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் தெரிவித்துள்ளார்.

ALSO READ: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்..!
 
தாமரைச் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று பாஜக எங்களை நிர்பந்திக்கவில்லை என்று குறிப்பிட்ட டிடிவி தினகரன்,  எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்ற பிரச்னை கிடையாது என்றும் எங்களின் தேவை என்ன என்பது பாஜகவுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments