Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி.. சந்திரபாபு, பவன் கல்யாண் கட்சிகள் அறிவிப்பு..!

Advertiesment
chandrababu naidu

Siva

, ஞாயிறு, 10 மார்ச் 2024 (07:58 IST)
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற போவதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாண் கட்சியான  ஜனசேனா ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட இந்த இரு கட்சிகள் தற்போது பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவருடைய கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகவும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அழைத்து வரப்படுகிறார் ஜாபர் சாதிக்.. சிக்க போகும் பிரபலங்கள் யார் யார்?