தமிழகத்தில் சமீப காலமாக புதிய பேருந்துகள் வாங்கவில்லை என அதிமுக மற்றும் பாஜக குற்றம் சாட்டிய நிலையில் 3000 பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டிருப்பதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தபடி 3000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகவும் புதியதாக வாங்கப்படும் பேருந்துகள் அடுத்த நிதி ஆண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
1190 மாநகர பேருந்துகள், 672 மாநகர தாழ்வு தள பேருந்துகள், 1138 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 3000 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகம் முழுவதும் புதிய பேருந்துகள் சாலையில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.